Kamarajar Birthday Celebration: Inter – School Competition 2025

நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 15.07.2025 அன்று காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 03.07.2025, 04.07.2025 ஆகிய தேதிகளில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ம. வான்மதி அவர்கள் வாழ்த்துரை வழங்கித்துவக்கி வைத்தார். கல்லூரியின் தாளாளர். திரு. இரா. முத்துசெல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

சீட்டா கவுன்சில் மாணவி அபிநயா வரவேற்புரை வழங்க, மாணவி கேத்தரினா ஜெனிபர் நன்றியுரை பகிர, மாணவி தனலட்சுமி தொகுப்புரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கலை நிகழ்ச்சிகள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி அ. காளி, திருமதி. ச. முருகலெட்சுமி உடற்கல்வி ஆசிரியர் செல்வி.க.வசந்தி, சீட்டா கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் திருமதி. மு. கௌசி பவானி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Date

Jul 15 2025
Expired!

Time

10:00 am - 11:30 am

Location

Seminar Hall

Leave A Reply