மரம் நடும் விழா – 17.03.2022
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் கிளீன் அண்ட் க்ரீன் கிளப் மூலம் மரம் நடும் விழா 17.03.2022 அன்று நடை பெற்றது. எமது கல்லூரி தாளாளர் திரு R.முத்துச்செல்வம் அவர்கள் மரக்கன்றினை நட்டு இவ்விழாவினை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பேராசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் மற்றும் மாணவியர்களும் அதிக ஆர்வத்துடன் ஆலமரம், வேப்பமரம், புங்கைமரம், புளியமரம் போன்ற பல மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
