கண் பரிசோதனை முகாம்
நமது நான்காம் அறிவான கண் பரிசோதனை எமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 19.01.2023 அன்று YRC மற்றும் RRC சார்பாக, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களும் எமது மாணவியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதித்தார்கள். மேலும் எமது மாணவியர் கண் பராமரிப்பு முறை பற்றியும், கண் தானம் பற்றியும் அறிந்து கொண்டார்கள்.
