பொங்கல் கொண்டாட்டம்
விவசாயமே வாழ்வியலுக்கு இன்றியமையாததாகும். அதை போற்றும் விதமாக நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 13.01.2023 அன்று “உழவர் தின விழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உழவர்களின் பெருமைகளை பறைசாற்றும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆகியவை நமது கல்லூரி மாணவிகளால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. உழவர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக நமது கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கலும் , கரும்பும் வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.
