ஒரு சொல் பல பொருள் இலக்கணப் போட்டி

ஒரு சொல் பல பொருள் இலக்கணப் போட்டி | தமிழ்த்துறை பாரதியார் மன்றம்

ஒரு சொல் பல பொருள் இலக்கணப் போட்டி

வாசகர் வட்டம் என்பது புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் சேர்ந்து உருவாக்கும் ஒரு குழுவாகும். இது வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், புத்தகங்களைப் பற்றி விவாதிக்கவும், இலக்கிய, இலக்கணப் படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுகிறது .

அவ்வகையில் 18.08.2025 அன்று நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பாரதியார் மன்றம் வாசகர் வட்டம் சார்பாக “ஒரு சொல் பல பொருள்” என்ற தலைப்பில் தமிழ் இலக்கணப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் காமராஜ் மகளிர் கல்லூரியின் தமிழார்வம் மிக்க மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காமராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ம. வான்மதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். “ஒரு சொல் பல பொருள்” என்ற போட்டி நிகழ்வை பார்வையிட்டு மாணவிகளுக்கு ஊக்கமளித்தது நிகழ்விற்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.

“ஒரு சொல் பல பொருள்” என்ற தமிழ் இலக்கணப் போட்டியில் அதிக அளவில் மாணவிகள் கலந்து கொண்டனர். தங்களின் தமிழ் இலக்கணத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவிகளின் பங்கேற்பும், பங்களிப்பும் பாராட்டுதற்குரியதாக இருந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பதை மற்ற மாணவிகளும் தெரிந்து கொண்டனர்.

Date

Aug 18 2025
Expired!

Time

10:30 am - 12:00 pm

Location

KWC Hall Nr. 31

Leave A Reply