Red Ribbon Club organizes a Awareness Programme on Save Daughter & Educate Daughter
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு சமுதாய நலத்துறைச் சங்கம் சார்பாக 18.7.2024 அன்றுபெண் குழந்தைகளைக்காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது .இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி G.Kநிவேதிதா அவர்கள் சமூகநலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், திருமதி S.ஜெயலட்சுமி அவர்கள் நிதி கல்வியறிவுத்துறை வல்லுநரும் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமணம் ,வளர் இளம் பருவ பேறு காலம் ,குற்றவியல் துறை, போதைத் தடுப்பு விழிப்புணர்வு பற்றிய செய்திகளை கல்லூரி மாணவிகளுக்கு பயன் தரும் வகையில் எடுத்துரைத்தார்கள். இதில் நமது கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். மாணவி S.வைஷ்ணவி தொகுப்புரை வழங்க, மாணவி K. இசக்கி சரண்யா வரவேற்புரை நல்க , மாணவி S.ஹேமா பாக்கியம் நன்றியுரை பகர நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
