International Yoga Day Celebration – Department of Tamil and English

நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் (18.06.2025) அன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.வான்மதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார். இன்பினிட்டி அகாடமி நிறுவனர் திருமதி சுகன்யா ராஜவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் மனநலம், உடல்நலம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு யோகா பயிற்சியினை அளித்தார். இந்நிகழ்ச்சியில் எமது கல்லூரியின் மாணவிகள் 150 பேர் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவி அருணா வரவேற்புரை நல்க, மாணவி தன்ஸ்லி நன்றியுரை பகிர, மாணவி சுபா தொகுத்து வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Date

Jun 18 2025
Expired!

Time

9:00 am - 10:30 am

Location

Conference Hall

Leave A Reply