Guest Lecture – Department of Tamil

நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் இன்று (11.07.2025) தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. கல்லூரியின் முதல்வர் முனைவர்.ம.வான்மதி அவர்கள் வாழ்த்துரை வழங்கித்துவக்கி வைத்தார். காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.சு.ராஜலெட்சுமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முல்லைப்பாட்டில் போர்த்திறமும், தலைவியின் ஆற்றாமையும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டில் தலைவன் போர் கருதி தலைவியை பிரிந்து சென்று தன் நாட்டைக் காக்க போர் புரிகின்றான். அதே நேரத்தில் தலைவி தன் இல்லத்தில் தலைவனுக்காக காத்திருப்பதையும் எளிய முறையில் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். இதில் 140 முதலாமாண்டு மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மாணவி நேச‌பிரியதர்ஷினி வரவேற்புரை வழங்க, மாணவி மதுமிதா நன்றியுரை பகிர, மொத்த நிகழ்வுகளையும் மாணவி முத்து செல்வி தொகுத்து வழங்க, விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.சுதா மற்றும் உதவிப் பேராசிரியர்கள் திருமதி ப.வள்ளிநாயகி திருமதி ச.முருகலெட்சுமி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Date

Jul 11 2025
Expired!

Time

10:00 am - 11:30 am

Location

Seminar Hall

Leave A Reply