74-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 26.01.2023 அன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்க சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மூத்த வழக்கறிஞர் நமது காமராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் திருமதி V. நீலவேணி அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். எமது கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. M.வான்மதி அவர்கள் உரையாற்றினார்.மேலும் எமது கல்லூரி நிர்வாக உறுப்பினர்களும்இவ்விழாவில் பங்கேற்றனர். குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசபற்று பாடல் மற்றும் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
