பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 15.07.2024 அன்று சீட்டா கவுன்சில் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்குரைஞர் V. சுபாச்சினி அவர்கள் சிறப்பி விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன . இந்நிகழ்ச்சியில் மாணவிகள் பேரவை துணைத் தலைவர் நாதிரா இஸரத் வரவேற்புரை வழங்கினார். மாணவிகள் பேரவையின் பொருளாளர் அகமது ரஜாப் நிஷா நன்றியுரை வழங்கினார்கள். மொத்த நிகழ்வுகளையும் மாணவிகள் பேரவை தலைவர் சுமின்ஷா தொகுத்து வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.
