பொங்கல் கொண்டாட்டம்
காலையில் ஒளி வீசும் கதிரவன் இருள் விலக்கி ஒளி வீசுவது போல மக்களின் வாழ்க்கையிலுள்ள இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் அறுவடை திருநாளில் பொங்கல் படையலிட்டு, உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து போற்றும் விதமாக நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 10.01.2025 அன்று “ பொங்கல் விழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. உழவர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக நமது கல்லூரியில் அனைத்து துறையிலும் மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து இவ்விழாவை சிறப்பித்தனர். தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டது. அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கலும், கரும்பும் வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.
