பவளம் கலைப் போட்டிகள்


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 12.09.2024 மற்றும் 13.09.2024 ஆகிய இரு தினங்கள் சிந்து, காவேரி, யமுனா, கங்கா ஆகிய, மாணவிகளின் குழுக்களுக்கிடையே பவளம் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர். முனைவர். எம். வான்மதி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக Administrator, Gamesville Sports Academy Thoothukudi, திருமதி.V.விஸ்வ பாரதி அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். மாணவியர் படிக்கும் பொழுது செல்போன் போன்ற ஊடகங்கள் மூலம் ஏற்படும் கவனச்சிதறல்களை தவிர்த்து குறிக்கோளை நோக்கி கவனம் செலுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். பெண்களுக்கு படிப்பு ஒன்றே சிறந்த அங்கீகாரம் என்பதை தனது உரையின் வாயிலாக மாணவிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார்கள். 2024-2025 ம் கல்வியாண்டிற்கான சுழற் கோப்பையை கங்கா அணியைச் சேர்ந்த மாணவியர் வென்றனர். மாணவர் பேரவை பொருளாளர் அகமது ரஜாப் நிஷா வரவேற்புரை நல்க. மாணவர் பேரவை செயலாளர் சுஜிதா நன்றியுரை பகர, மாணவர் பேரவை துணைத்தலைவர் தொகுப்புரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

Date

Sep 13 2024
Expired!

Time

10:00 am

Leave A Reply