தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக உலகத் தாய்மொழி தின விழா கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 21.02.2025 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக உலகத் தாய்மொழி தின விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர் முனைவர் ம.வான்மதி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவி எடல் குயின் தொகுப்புரை வழங்க, மாணவி முத்துச்செல்வி வரவேற்புரை நல்க, மாணவி ரஞ்சிதா நன்றியுரை பகர நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
