தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக நடைபெறும் “திறன் மேம்பாட்டுப் பயிற்சி”


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 17.03.2025 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக திறன் அடிப்படைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட மற்றும் மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு மாணவிகளின் திறன்களை மேம்படுத்தும் விதமாக தமிழ்த்துறை சார்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. நாடகக் கலை உத்திகளான எண் வகை மெய்ப்பாடுகள் தோன்றும் விதமாக சாக்ரடீஸ் இயற்றிய ராஜா ராணி நாடகத்தினை முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவிகள் நடித்துக் காட்டினார். இதில் சாக்கரடீஸாக முகில் சித்ராவும் மெலிடஸாக விஜயலட்சுமியும் அணிடஸாக ஜெயராணியும், கிரீடோவாக பத்திரகாளியும் நீதிபதியாக ரோஸிலியாவும் சிறைக் காவலனாக செல்வலட்சுமியும் நாடகத்தின் கதாபாத்திரமாகவே மாறி தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.சுதா அவர்களும், பேராசிரிய பெருமக்கள் திருமதி.ப. வள்ளிநாயகி மற்றும் திருமதி.ச.முருகலெட்சுமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Date

Mar 17 2025
Expired!

Time

2:00 pm

Leave A Reply