தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக நடைபெறும் சிறப்புரை “பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு”


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 11. 03.2025 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. இவ்விழாவினை எமது கல்லூரி முதல்வர் முனைவர் ம.வான்மதி அவர்கள் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி, மாவட்ட சட்ட சேவை மையத்தின் மூத்த நீதிபதி திருமதி.C.கலையரசி அவர்கள் மற்றும் தூத்துக்குடி, மாவட்ட சட்ட சேவை மையத்தின் வழக்கறிஞர் திரு சங்கரநாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக இன்று சமூகத்தில் நிகழும் குற்றங்களிலிருந்து தங்களை சட்டத்தின் துணை கொண்டு எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாக எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் 130 மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவி எடல் குயின் வரவேற்புரை வழங்க, இரண்டாம் ஆண்டு வணிகவியல் வங்கியியல் மற்றும் நிதித் துறையைச் சார்ந்த மாணவி ஆதி நன்றியுரை பகிர, மொத்த நிகழ்வுகளையும் மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறையைச் சார்ந்த மாணவி சுமின்ஷா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சுதா அவர்களும் பேராசிரிய பெருமக்கள் திருமதி வள்ளிநாயகி மற்றும் திருமதி முருகலெட்சுமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Date

Mar 11 2025
Expired!

Time

11:00 am

Leave A Reply