தமிழ்த்துறை பாரதியார் மன்றம் நடத்தும் சிறப்புரை
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 17.12.2024 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக சுதந்திர போராட்ட வீரமிகு பெண்களின் வரலாறு என்னும் தலைப்பில் சிறப்புரை நடைப்பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. மாணவி பவித்ரா வரவேற்புரை வழங்கினார். ராஷ்ட்ர சேவிகா சமிதி அகில இந்திய பாரதிய பொதுச் செயலாளர் மானனீய .ஸ்ரீ. சீதா காயத்ரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய வரலாற்றில் பெண்களின் வீரமும் ,தியாகமும் இன்றியமையாதது. இராணி லட்சுமிபாய், சம்பா போன்ற வீரமிகு பெண்களின் வாழ்க்கை நிகழ்வுகளை மிக எளிமையாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் நூறு மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். மாணவி ஆதி நன்றியுரை வழங்க மாணவி சுபஸ்ரீ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
