தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக வாசகர் வட்டம் “அறிவோம் ஔவையார்”


இன்று (30.9.2024)நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக வாசகர் வட்டம் “அறிவோம் ஔவையார்” என்ற தலைப்பில் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர் முனைவர்.ம.வான்மதி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் எமது கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நா.மு. வேங்கடசாமி நாட்டார் பதிப்பித்த ஔவையாரின் “கொன்றைவேந்தன்” என்ற நூலை மதிப்பீடு செய்து அதன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாணவி சுபஸ்ரீ தொகுப்புரை வழங்க, மாணவி ஆதி வரவேற்புரை நல்க, மாணவி பவித்ரா நன்றியுரை பகிர நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Date

Sep 30 2024
Expired!

Time

10:00 am

Leave A Reply