சிலம்பம் பயிற்சி பட்டறை | தமிழ்த்துறை பாரதியார் மன்றம்

இன்று நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக சிலம்பம் ஒரு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர் முனைவர் ம.வான்மதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார்.

சிலம்பில் தேர்ச்சி பெற்ற எமது கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான கிருஷ்ண பாரதி மற்றும் சந்தன செல்வி ஆகியோரால் மாணவிகளுக்கு சிலம்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவி அருணா தொகுப்புரை வழங்க, மாணவி தனலட்சுமி வரவேற்புரை நல்க, மாணவி முத்துச்செல்வி நன்றியுரை பகர நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Date

Jul 23 2025
Expired!

Time

9:30 am - 10:30 am

Location

KWC Open Auditorium

Leave A Reply