சிலம்பம் ஒரு நாள் பயிற்சி பட்டறை


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் இன்று (19. 3. 2024 ) தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறையாக சிலம்பம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. இதில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக தற்காப்புக் கலைகளுள் ஒன்றான சிலம்பம் மாணவியர்களுக்கு மாணவியர்களால் கற்றுக் கொடுக்கப்பட்டது. வணிகவியல் துறையைச்சேர்ந்த மாணவிகளான வைஷ்ணவி, காவியா இருவரும் மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்தனர். தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் பற்றிய செய்திகளையும், இந்த கம்பு சுற்றுதல் மூலம் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் புத்துணர்ச்சி பற்றியும் மாணவி வைஷ்ணவி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் நமது கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பின்னர் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதில் மாணவி தன்ஸ்லி தொகுப்புரை வழங்கினார்.

Date

Mar 19 2024
Expired!

Time

9:30 am

Leave A Reply