இணையவழி குற்றவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக 24.06.2024 முதல் 28.06.2024 வரை ஐந்து நாட்கள் இணைய வழி குற்றவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.மாணவி எடல் குயின் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை திரு. மா. பெனாயா மேலாளர் மாஸ்டர் டிரெயினர் NIIT அறக்கட்டளை , புதுடெல்லி அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார். எமது கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு இணையவழியில் எவ்வாறு எல்லாம் குற்றங்கள் நடைபெறுகிறது என்றும், அதிலிருந்து எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது பற்றியும் அறிந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மாணவி பேரரசி நன்றியுரை வழங்க மாணவி சுமின்ஷா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Jun 24 - 28 2024
Expired!

Time

2:00 pm

Leave A Reply