எரிபொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் இன்று (15. 9 .2023 )தமிழ்த் துறை மற்றும் ஆங்கிலத்துறை சார்பாக எரிபொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர் முனைவர் எம் .வான்மதி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார் .இதில் சிறப்பு விருந்தினராக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உதவி மேலாளர் திரு. வி .கோபாலம் அவர்களும், அகல்யா கேஸ் உரிமையாளர் திருமதி அபிநயா அவர்களும், கலந்துகொண்டு எரிபொருள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். மாணவி தன்ஸ்லி வரவேற்புரை வழங்க, ரூத் ஜியோஃனா நன்றியுரை பகர, நர்மதா தொகுப்புரை வழங்க ,விழா இனிதே நிறைவுற்றது.
