உலக தாய்மொழி தின விழா


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையின் பாரதியார் மன்றம் சார்பாக 21.02.2023 அன்று ‘ உலக தாய்மொழி தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. இவ்விழாவிற்கு எம் கல்லூரியின் தாளாளர் உயர்திரு. இரா.முத்துசெல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து சிறப்புரையாற்றினார். எம் கல்லூரி மாணவி அகமத் ரஜப் நிஷா வரவேற்புரை வழங்கினார்.மேலும் பாரதியார் பாடல், கவிதை, பரத நாட்டியம், குழு நடனம் ஆகியவை நிகழ்த்தப்பட்டது. தமிழ், மலையாளம்,தெலுங்கு, அரபி,ஹிந்தி ஆகிய மொழிகளின் சிறப்புகள், மொழிகளின் சங்கமமாக நிகழ்த்தப்பட்டது.இன்றைய காலகட்டங்களில் தமிழர் பண்பாடு வளர்கிறதா? வீழ்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் சிறப்பாக நடத்தப்பட்டது. மாணவி வள்ளீஸ்வரி பட்டிமன்ற நடுவராக பட்டிமன்றத்தை வழிநடத்தினார். இந்நிகழ்ச்சியை மாணவி அதிஷ்டலஷ்மி தொகுத்து வழங்கினார். மாணவி பரிமளா நன்றிவுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Feb 21 2023
Expired!

Time

10:00 am

Leave A Reply