புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் (13.06.25) அன்று புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்டிடத்தை தூத்துக்குடி கல்விக் குழு செயலாளர் திரு P.S.P.K.J.சோமு அவர்கள் தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நமது கல்லூரியின் முதல்வர் முனைவர்.M.வான்மதி அவர்கள் மற்றும் காமராஜ் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் J.பூங்கொடி அவர்கள், தற்போதைய பொறுப்பு முதல்வர் முனைவர் K.பானுமதி அவர்களும், காரப்பேட்டை நாடார் மகமைச் செயலாளர் திரு.P. விநாயகமூர்த்தி அவர்கள், மற்றும் தூத்துக்குடி கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவில் நமது கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் T.சுதா வரவேற்புரை நல்க, ஆங்கிலத் துறை பேராசிரியர் M.நதியா நன்றியுரை பகிர, தமிழ்த்துறை பேராசிரியர் S. முருகலெட்சுமி தொகுப்புரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
