75வது குடியரசு தின விழா


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் (26.01.2024) 75-வது குடியரசு தின விழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவிகளின் அணிவகுப்புடன், மாணவி ஜெமிஷா வரவேற்புரை வழங்கிட தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக எமது கல்லூரி தாளாளர் திரு. முத்துசெல்வம் ஐயா அவர்கள் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார். மாணவி பவித்ரா தேசப்பற்றுப் பாடலுக்கு நடனமாடினாள். குடியரசு தினவிழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி எடல்குயின் குடியரசு தினவிழா பற்றி சிற்றுரை ஆற்றினார். அதன்பின் மாணவிகளது குழு நடனம் காண்போரைக் கவரும் விதமாக இருந்தது. மாணவி பவித்ரா தொகுப்புரை வழங்க, வள்ளீஸ்வரி நன்றியுரை பகர இனிப்புகள் வழங்கப்பட்டு விழா தேசிய கீதத்துடன் இனிதே முடிவுற்றது.

Date

Jan 26 2024
Expired!

Time

8:00 am

Leave A Reply