தமிழ்த்துறை வாசகர் வட்டம் சார்பாக என்னைக் கவர்ந்த திருக்குறள் அதிகாரம் என்ற தலைப்பில் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 12.02.2024 அன்று தமிழ்த்துறை வாசகர் வட்டம் சார்பாக என்னைக் கவர்ந்த திருக்குறள் அதிகாரம் என்ற தலைப்பில் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது .இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர் முனைவர் எம் .வான்மதி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார் .இதில் கலந்துகொண்ட எமது கல்லூரி மாணவிகள் ஒவ்வொருவரும் திருக்குறளில் தங்களுக்குப் பிடித்த அதிகாரத்தினை எடுத்து அதனை மதிப்பீடு செய்து அதன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாணவி தன்ஸ்லி தொகுப்புரை வழங்க, எடல் குயின் வரவேற்புரை நல்க, பவித்ரா நன்றியுரை பகர விழா இனிதே நிறைவுற்றது.
