விநாயகர் சதுர்த்தி விழா
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 30.8.2022 அன்று ஆன்மீக வளர்ச்சி மன்றம் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை செல்வி. சுமின்ஷா தொகுத்து வழங்கினார். இறை வழிபாட்டு பாடலுடன் விழா இனிதே தொடங்கியது. செல்வி. நிவேதா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் உயர்திரு ஐயப்பன் அவர்கள் விழாவைச் சிறப்பிக்கும் பொருட்டு சிறப்புரை வழங்கினார். விநாயகரைப் போற்றும் விதமாக பஜனைப் பாடல்கள் மாணவிகளால் பாடப்பட்டது. 131 மாணவிகள் பங்கேற்ற இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் பிரசாதம் வழங்கி விழா நிறைவடைந்தது.
