பேச்சுப்போட்டி – தமிழனின் பெருமையைப் பறைசாற்றிய இராஜராஜசோழன்
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் பாரதியார் மன்றம் சார்பாக தஞ்சை இராஜராஜசோழனின் பிறந்தநாளை முன்னிட்டு 05.11.2022 அன்று பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.இதில் இராஜராஜசோழனின் பெருமைகளை மாணவிகள் அறிந்துகொள்ளும் பொருட்டு ‘தமிழனின் பெருமையைப் பறைசாற்றிய இராஜராஜசோழன் ‘ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.இராஜராஜசோழனின் வரலாற்றினை அனைத்து மாணவிகளும் அறிந்து கொள்ளும் விதத்தில் காணொலி காண்பிக்கப்பட்டது.
