புதிய கட்டடத் திறப்பு விழா
இன்று (19.6.24)நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இக்கட்டிடத்தை காமராஜ் கல்லூரியின் செயலாளர் திரு P.S.P.K.J.சோமு அவர்கள் தலைமையில் காரப்பேட்டை நாடார்கள் மகமைச் செயலாளர் திரு. பா.விநாயகமூர்த்தி ஐயா அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இத்திறப்பு விழாவில் நமது கல்லூரியின் தாளாளர் திரு இரா.முத்துச்செல்வம் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.நமது கல்லூரியின் முதல்வர் திரு.M.வான்மதி அம்மா அவர்களும் மற்றும் தூத்துக்குடி கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவில் நமது கல்லூரி வணிகவியல் துறை மாணவி R.பிளசி ஞான செல்வி வரவேற்புரை நல்க, ஆடை வடிவமைப்புத் துறை மாணவி C.மகராசி தொகுப்புரை வழங்க, நுண்ணுயிரியல் துறை மாணவி S.சுமின்ஷா நன்றியுரை பகர விழா இனிதே நிறைவுற்றது.
