தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக ‘பெரிதினும் பெரிது கேள்’ சிறப்புரை


நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 23.8.2024 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக ‘பெரிதினும் பெரிது கேள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.மு.துர்கா தேவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இன்றைய சூழலில் மாணவியரின் கனவானது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்காது வானமே எல்லையாகக் கொண்டு அவர்கள் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எடுத்துரைத்தார். முதலாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி முத்துச்செல்வி வரவேற்புரை வழங்க, இரண்டாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி தன்ஸ்லி நன்றியுரை கூற, மொத்த நிகழ்வுகளையும் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி எடல் குயின் தொகுத்து வழங்க விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.

Date

Aug 23 2024
Expired!

Time

10:00 am

Leave A Reply