தமிழ்த்துறை பாரதியார் மன்றம் நடத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
காமராஜ் மகளிர் கல்லூரியில் 10.02.2025 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக திறன் அடிப்படைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட மற்றும் மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு எமது கல்லூரியில் உள்ள மாணவிகளின் திறன்களை மேம்படுத்தும் விதமாக தமிழ்த்துறை சார்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. இலக்கண இலக்கியப் பாடல்களைச் சீர்பிரித்து வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாகவும், கட்டுரை எழுதும் போது சரியான உட்தலைப்பு இடுதல், தகுந்த மேற்கோள் காட்டுதல் ஆகியன குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. பேச்சுப்போட்டியில் பேசுவதற்குறிய உத்திகளான ஏற்றயிறக்கம், தெளிவான உச்சரிப்பு, தங்குதடையின்றி பேசுதல், தகுந்த மேற்கோளைத் தேர்ந்தெடுத்து பேசுதல் ஆகியவை குறித்து எமது கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
