தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக நடைபெறும் “தமிழ்நாடு அறிவியல் ஆளுமைகள்”
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 21.03.2025 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள் என்ற தலைப்பில் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் வகுப்பு நடைபெற்றது. இவ்வகுப்பில் ராமானுஜம், சர்.சி.வி.ராமன், ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, ராகவன் அருணாச்சலம், ஆனந்த ராமன் ஆகியோர்களின் அறிவியல் பணிகளையும், சாதனைகளையும், அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகளையும் பற்றி கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவிகளுக்கு எளிதாக புரியும் வண்ணம் பயிற்றுவிக்கப்பட்டது. இதில் இரண்டாம் ஆண்டு பயிலும் 100 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.சுதா அவர்களும், பேராசிரிய பெருமக்கள் திருமதி.ப. வள்ளிநாயகி மற்றும் திருமதி.ச.முருகலெட்சுமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
