உலக தாய்மொழி தினவிழா
இன்று (21.02.2024) நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக உலக தாய்மொழி தினவிழா கொண்டாடப்பட்டது. கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் நமது கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.வான்மதி அவர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.த.சுதா அவர்கள் விருந்தினர் அறிமுகவுரை வழங்கினார். ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.ர.செல்வலதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்மொழியின் சிறப்பு பற்றியும், தமிழ்மொழியின் பெருமை குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினருக்கு நமது கல்லூரியின் முதல்வர் நினைவுப் பரிசு வழங்கினார்கள். பின்னர் மாணவியரின் கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், பாரதியார் பாடல்கள் மற்றும் மலையாளப் பாடல்கள் பாடப்பட்டன.மொழிகளின் அணிவகுப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி, அரபி ஆகிய மொழிகளின் சிறப்பு குறித்த சங்கமம் நடைபெற்றது. இன்றைய ஊடகங்களின் வளர்ச்சியால் தமிழ் மொழி தழைக்கின்றதா? தடுமாறுகின்றதா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் காண்போரை மகிழ்விக்கும்படி அமைந்திருந்தது. மாணவி சுபினா மெர்லின் வரவேற்புரை வழங்க, மாணவி சுஜிதா பொன்மலர் நன்றியுரை கூற, மொத்த நிகழ்வுகளையும் மாணவி ஆயிஷா பீவி தொகுத்து வழங்க விழா தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.
