அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்


இன்று (22.01.2024) நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மாணவியர்களால் நடத்தப்பட்டது .இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர் முனைவர் எம் .வான்மதி அம்மா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார் .எமது கல்லூரி மாணவி ஐஸ்வர்யா வரவேற்புரை வழங்க விழா இனிதே துவங்கியது. இராமனின் புகழ் பாடும் விதமாக காண்போர் வியக்கும் வண்ணம் நடனம், நாடகம் ,பாடல் ,சிறப்புரை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மாணவிகளால் நடத்தப்பட்டன . பின் எமது கல்லூரி மாணவி அனுஸ்ரீ விழாவினை தொகுத்து வழங்க முத்துலட்சுமி நன்றியுரை பகர விழாவின் நிறைவாக ஆர்த்தி காட்டிய பின்பு, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Date

Jan 22 2024
Expired!

Time

10:00 am

Leave A Reply