ZETA STUDENT COUNCIL INAUGURATION
நமது காமராஜர் மகளிர் கல்லூரியில், 16.09.2022 அன்று மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகள் வள்ளீஸ்வரி மற்றும் மீனாட்சி தொகுத்து வழங்கினர். இறை வணக்க பாடலுடன் விழா இனிதே தொடங்கியது. செல்வி ஸ்வேதா வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் வான்மதி அவர்கள் தொடக்க உரை வழங்கினார். பின்பு கல்லூரி தாளாளர் திரு முத்து செல்வம் அவர்கள் விழாவிற்கு சிறப்புரை வழங்கினார். பின்பு விழாவின் முக்கிய கட்டமான இந்த வருடத்திற்கான மாணவர் பேரவையின் தலைவர், உப தலைவர், செயலாளர், மற்றும் பொருளாளராக முறையே இரண்டாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி ஜெயந்தி, இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நர்மதா, இரண்டாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி தீபிகா, மற்றும் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி அஸ்வினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேராசிரியர்களால் அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாணவர் பேரவை சார்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இறுதியாக செல்வி ஞான ஜெமிஷா நன்றியுரை வழங்கினார்.
