75th INDEPENDENCE DAY CELEBRATION
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 15.08.2022 அன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. வான்மதி அவர்கள் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் உயர்திரு. முத்துசெல்வம் அவர்கள்,காமராஜ் கல்லூரி செயலாளர் திரு. சோமு அவர்கள் மற்றும் காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் திரு. மோகன்ராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பற்றி நுண்ணுயிரியல் துறை மாணவி சு. சுமின்ஷா பேசினார். பின்பு மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் தேசப்பற்று பாடல் மற்றும் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நமது கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
