தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக “உறவுகளும், உணர்வுகளும் ” சிறப்புரை
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 06.03.2025 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக உறவுகளும், உணர்வுகளும் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. இவ்விழாவினை எமது கல்லூரி முதல்வர் முனைவர் ம.வான்மதி அவர்கள் தொடங்கி வைத்தார். காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ம.லெ. ராஜேஸ்வரிஅவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித உறவுகள் உணர்வுகளால் எவ்வாறு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், இன்றைய இளைய தலைமுறையினர் உறவுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் மாணவிகளுக்கு சிறப்பாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் 130 மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இரண்டாம் ஆண்டு வணிகவியல் வங்கியியல் மற்றும் நிதித் துறையைச் சார்ந்த மாணவி ஜெய் சுகிதா வரவேற்புரை வழங்க, முதலாம் ஆண்டு வணிகவியல் வங்கியியல் மற்றும் நிதித் துறையைச் சார்ந்த மாணவி ரஞ்சிதா நன்றியுரை பகிர, மொத்த நிகழ்வுகளையும் முதலாம் ஆண்டு வணிகவியல் வங்கியியல் மற்றும் நிதித் துறையைச் சார்ந்த மாணவி வைஷ்ணவி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். சுதா அவர்களும் பேராசிரிய பெருமக்கள் திருமதி. வள்ளிநாயகி மற்றும் திருமதி. முருகலெட்சுமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
