தமிழ்த்துறை பாரதியார் மன்றம் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் “கம்பராமாயணத்தில் என்னை கவர்ந்த கதாபாத்திரம்”
இன்று (29.1.2025) நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக வாசகர் வட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்“கம்பராமாயணத்தில் என்னை கவர்ந்த கதாபாத்திரம்” என்ற தலைப்பினை மையமாகக் கொண்டு புத்தக மதிப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர் முனைவர்.ம.வான்மதி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் எமது கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ”கம்பராமாயணத்தில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து மதிப்பீடு செய்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாணவி சுபஸ்ரீ தொகுப்புரை வழங்க, மாணவி ரஞ்சிதா வரவேற்புரை நல்க, மாணவி ஜெயசுகிதா நன்றியுரை பகிர நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
