பறவைகள் உலகின் காப்பான் என்ற ஓவியக் கண்காட்சி
மாநில அளவில் நடைபெற்று வரும் பறவைகள் உலகின் காப்பான் என்ற ஓவியக் கண்காட்சி (19. 2. 2024) நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.கண்காட்சியில் கல்லூரி மாணவிகளும், பல்வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.நமது கல்லூரியின் முதல்வர் முனைவர்.M.வான்மதி அம்மா அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். தற்போதைய காலத்தில் அழிந்து வரும் பறவைகளை எவ்வாறு காக்க வேண்டும் என்பதையும் அதன் தேவை குறித்தும் காமராஜ் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் A.தேவராஜ் அவர்கள் கருத்துரை வழங்கினார். கண்காட்சியின் நோக்கமான பல உயிரினங்கள் வாழும் மரங்கள் உருவாகக் காரணமான பறவைகளைப் பாதுகாக்கும் அவசியத்தை குறித்து ஈரநிலம் அமைப்பின் நிறுவனர் ஓவியர் ந.தமிழரசன் அவர்கள் விளக்கிக் கூறினார். மாணவி வள்ளீஸ்வரி வரவேற்புரை வழங்க, மாணவி. சுமின்ஷா நன்றியுரை நவில மாணவி அஹ்மத் ரஜப் நிஷா தொகுத்து வழங்க நாட்டுப்பண் உடன் விழா நிறைவு பெற்றது.
