பொங்கல் கொண்டாட்டம்
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவே உழவர் தின விழா. அவ்விழாவை போற்றும் விதமாக நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 12.01.2024 அன்று “உழவர் தின விழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆகியவை நமது கல்லூரி மாணவிகளால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. உழவர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக நமது கல்லூரி யில் அனைத்து துறையிலும் மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து இவ்விழாவை சிறப்பித்தனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கலும் , கரும்பும் வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.
