சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி
நிலாச்சோறு உண்ட தலைமுறை, நிலவில் தடம் பதித்த, தென்துருவத்தை சென்று அடைந்த முதல் நாடு, எனும் புதிய சரித்திரம் படைத்த இந்தியாவின் சந்திராயன் – 3 நிலவில் இறங்கியதை எமது காமராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள் நாட்டுப்பற்றுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். ம.வான்மதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலகு 248 சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவிகள் உற்சாகமாக சந்திராயன் உருவான வரலாறு, கடந்து வந்த பாதை, உலக நாடுகளின் பார்வையில் இந்தியா என்பதை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் 246 மாணவிகள் கலந்து கொண்டனர். வாழ்க பாரதம்…வாழ்க வையகம்… ஜெய்ஹிந்த்… வந்தே மாதரம்.
